தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் கடந்த 2023ஆம் ஆண்டு, சென்னை முகப்பேர் ரெட்டிபாளையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நொளம்பூர் போலீசார் எட்டு பேரை கைது செய்த நிலையில் நித்யானந்தம் என்பவரை இரண்டு ஆண்டுகளாக தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நித்தியானந்தவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் பதுங்கி இருந்த நித்தியானந்தம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நொளம்பூர் காவல் நிலைய தனிப்படையினர் புவனேஸ்வர் விமான நிலையம் சென்று நித்தியானந்ததை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ஜெகன் கொலை தொடர்பாக 8 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒன்பதாவது ஆளாக நித்தியானந்தத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
