Thursday, December 25, 2025

மாமியார் மீது காதல்., புகைப்படத்தால் வசமாக சிக்கிய கணவன்

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமோத் என்பவருக்கும் ஷிவானி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தான் ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

Related News

Latest News