ரூ.95 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,900-க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.206 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து பார் வெள்ளி ரூ.2,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News