தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 245 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.207 க்கும் கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.2,07,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
