வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் : அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

உலக அளவில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் டாப் 10 பட்டியல் பற்றிய விவரங்களை, சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) சதவீதத்தில் ஏற்படும் மாற்றம், உயர்ந்த வளர்ச்சி விகிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

அமெரிக்காவின் பொருளாதாரம் 30.51 லட்சம் கோடி என்ற அளவில் முதல் இடத்தில் உள்ளபோதும், அதன் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

சீனா 19.23 லட்சம் கோடி மற்றும் ஜெர்மனி 4.7 லட்சம் கோடி ஆகிய நாடுகள் அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. அவற்றின் வளர்ச்சி விகிதம் முறை 4% மற்றும் -0.1% ஆகக் காணப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் 4.19 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நான்காம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2% ஆகக் காணப்படுகின்றது, இது முதலிடம் வகிப்பதால், விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற பெரிய நாடுகளைத் தாண்டி இந்தியா முன்னிலை வகிக்கின்றது.

இந்த வரிசையில், ஜப்பான் 4.19 லட்சம் கோடி (0.6 சதவீதம்) என்ற அளவில் 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 3.84 லட்சம் கோடி (1.1 சதவீதம்) என்ற அளவில் 6-ம் இடத்திலும், பிரான்ஸ் 3.21 லட்சம் கோடி (0.6 சதவீதம்) என்ற அளவில் 7-ம் இடத்திலும், இத்தாலி 2.42 லட்சம் கோடி (0.4 சதவீதம்) என்ற அளவில் 8-ம் இடத்திலும், கனடா 2.23 லட்சம் கோடி (1.4 சதவீதம்) என்ற அளவில் 9-ம் இடத்திலும், பிரேசில் 2.13 லட்சம் கோடி (2.0 சதவீதம்) என்ற அளவில் 10-ம் இடத்திலும் உள்ளன.

Related News

Latest News