இனி காகிதம் தயாரிக்க மரம் தேவையில்லை! சீனா தயாரித்துள்ள “ஸ்டோன் பேப்பர்!”

காகித உற்பத்திக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீனா சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் புதுமையான ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளது. அது தான் Stone Paper எனப்படும் காகிதம்.

இக்காகிதம், மரங்களை பயன்படுத்தாமல் மணல் துகள் மற்றும் சிறிதளவு பாலிதிலீன் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் எந்த மரத்தையும் வெட்ட தேவையில்லை. மேலும், நீர்வளமும் மிக குறைவாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் Stone Paper தயாரிக்க 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது; அதே சமயம் பாரம்பரிய காகித உற்பத்திக்குத் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த காகிதம் நீர்ப்புகா தன்மையுடையது. கிழிவதற்குக் கடினமானது, மேலும் மென்மையான மேற்பரப்பைக் கொண்டது. இதனை எழுத, அச்சிட மற்றும் பதிப்பு துறைகளில் பயன்படுத்த முடியும். மேலும் இது மறுசுழற்சிக்கு ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பல தொழிற்சாலைகள் தற்போது இந்த Stone Paper உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. வருங்காலத்தில் இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய புதுமைகள், மரங்களை வெட்டாமல் காகிதம் தயாரிக்கும் புதிய யுகத்தை ஆரம்பிக்கின்றன. “Stone Paper” மூலம் சுற்றுச்சூழலை காக்கும் ஒரு சிறிய ஆனால் முக்கியமான முன்னேற்றம் சீனாவால் முன் எடுக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News