அரசு ஊழியர்களுக்கு Good நியூஸ்! 8வது ஊதியக் குழுவில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 8வது மத்திய ஊதியக் குழு அதாவது 8th Pay Commission பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025 ஜனவரியில் இதற்கான கொள்கை ஒப்புதல் மத்திய அரசால் அளிக்கப்பட்டிருந்தாலும், ஆணையம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விவாதங்கள் மாநில அரசுகளுடன் நடைபெற்று வருவதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதமாக உள்ளது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததும் அது 60 சதவீதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படை ஃபிட்மென்ட் காரணி 1.60 ஆக இருக்கும் என்றும், அதனுடன் 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் உயர்வு வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 20 சதவீத உயர்வு வழங்கப்பட்டால் ஃபிட்மென்ட் காரணி 1.92 ஆகவும், 30 சதவீத உயர்வு வழங்கப்பட்டால் 2.08 ஆகவும் உயரும். “அடிப்படை சம்பளம் × (இன்ட்டு) ஃபிட்மென்ட் காரணி = புதிய சம்பளம்” என்ற விதிமுறைப்படி கணக்கிடப்படும்.

தற்போது 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 மற்றும் ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்ததும், அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியமாக மாற்றப்படும். ஃபிட்மென்ட் காரணி 1.92 என நிர்ணயிக்கப்பட்டால் புதிய அடிப்படைச் சம்பளம் ரூ.34,560 ஆகும்; 2.08 ஆக இருந்தால் ரூ.37,440 ஆகும். அதேபோல் ஓய்வூதியம் ரூ.17,280 முதல் ரூ.18,720 வரை உயரும். இந்த அறிவிப்புக்காக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related News

Latest News