தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. என்னவென்றால், இலவச சமையல் சிலிண்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு இலவச சிலிண்டர் கிடைக்கும். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக இந்த ரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ள பெண்களுக்கு அம்மாநில அரசு இலவச சமையல் சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தினை யார் பயன்பெறலாம்? இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற, பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடியினர் (ST), வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் (BPL அட்டை) மற்றும் பிரதான் மந்திரி அந்த்யோதயா அன்ன யோஜனாவின் பயனாளிகளும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.
மேலும், இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒன்பது சிலிண்டர்கள் வரை ஒரு சிலிண்டருக்கு 3,000 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.
