பாகிஸ்தானில் தங்கம் எவ்வளவு தெரியுமா? இவ்வளவு வித்தியாசமா? நம்ப முடியாத உண்மை!

நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேசமயம், அண்டை நாடான பாகிஸ்தானில் தங்க விலை இந்தியாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இரு நாடுகளிலும் தங்கம் முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுவதால், விலை வேறுபாடு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்திய உயர்வின் பின்னணியில், பாகிஸ்தானில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை சுமார் ரூ.4,30,500 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதே அளவு தங்கத்தின் விலை தற்போது ரூ.1,22,290 மட்டுமே. இதன் மூலம், இரண்டு நாடுகளுக்கிடையே தங்க விலையில் பெரும் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இந்தியாவில் சுமார் 32 பைசா மட்டுமே என்பதால், நமது ரூபாய் தற்போது பாகிஸ்தான் ரூபாயை விட 3.17 மடங்கு உயர்ந்த மதிப்பில் உள்ளது. இதனால், சிலர் இந்தியாவில் தங்கம் வாங்கி பாகிஸ்தானில் விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் என எண்ணினாலும், அது சட்டவிரோதமானது.

இந்தியாவில் இருந்து தங்கத்தை ஏற்றுமதி செய்ய அரசின் அனுமதி அவசியம். மேலும், பாகிஸ்தான் சில நாட்களுக்கு தங்க இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் அங்குள்ள சந்தையில் தங்கம் பற்றாக்குறை ஏற்பட்டு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி அனுமதி, உரிமம், சுங்க அனுமதி போன்ற நடைமுறைகள் இன்றி தங்கத்தை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்லுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.

Related News

Latest News