ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்கத் சிங் என்பவருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பை சேர்ந்த பெண் ஒருவருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய மன்கத் சிங் இந்திய தொடர்பான உளவு தகவல்களை கொடுத்துள்ளார். இதையடுத்து மன்கத் சிங்கை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
