கடந்த ஜூலை மாதம் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் நிறுவன தலைமை நிதி அதிகாரி அசோக் பால், பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
