ஜிமெயில் மற்றும் அவுட்லுக் போன்ற பிரபலமான மின்னஞ்சல் சேவைகளுக்கு மாற்றாக Zoho Mail பயன்படுத்த விரும்புகிறீர்களா? அதற்கான செயல்முறையை இங்கு பார்க்கலாம்.
சமீபத்தில் தொழில்நுட்ப உலகில் Zoho Mail மற்றும் Arattai அதிகம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாட்ஸ்அப்புக்கு போட்டியாக அரட்டை வேகமாக பிரபலமாகி வருகிறது. எனினும், அது நம்பகமான பயன்பாடாக மாற பாதுகாப்பு அப்டேட்டுகள் அவசியம். இதேவேளை, Zoho Mail இந்திய உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சேவையாக நிலைபெற்றுள்ளது.
Zoho Mail-ஐ பயன்படுத்த, முதலில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று புதிய கணக்கை உருவாக்க வேண்டும். அங்கு இலவச மற்றும் கட்டண அடிப்படையிலான இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர் தமக்கு தேவையானதைத் தேர்வு செய்யலாம்.
புதிய Zoho Mail கணக்கிற்கு, ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல்களை கொண்டு வர IMAP அமைப்பை பயன்படுத்த வேண்டும். உங்கள் காண்டாக்டுகள் மற்றும் பிற கோப்புறைகளும் பாதுகாப்பாக மாற்றப்படுகின்றன. மேலும், ஜிமெயிலில் உள்ள அனைத்து தரவுகளையும் Zoho Mail-க்கு மாற்ற Migration Wizard வசதியை பயன்படுத்தலாம்.
புதிய மின்னஞ்சல்கள் Zoho Mail-ல் வர, ஜிமெயிலின் Forwarding அம்சத்தை இயக்க வேண்டும். அதோடு, உங்கள் தொடர்புகளுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை பகிர்வதன் மூலம், எதிர்காலத்தில் வரும் அனைத்து தகவல்களும் புதிய கணக்கில் பெறப்படுவதை உறுதி செய்யலாம்.
அத்துடன், ஜிமெயிலிலிருந்து Zoho Mail-க்கு தரவுகளை மாற்றுவது எளிதானது என்றாலும், பெரிய அளவிலான கோப்புகள் இருந்தால் அது படிப்படியாகவும், சற்றே பொறுமையுடனும் நடைபெறும். உலகளவில் பில்லியன் கணக்கானோர் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஆனால், Zoho Mail வழங்கும் தனித்துவமான அம்சங்களால், இதனைத் தேர்வு செய்யும் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர்.
Zoho Mail இலவசமாக கிடைப்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
