ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் 16ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் அமீர்கான் முத்தாகி நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில் பல்வேறு செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் பங்கேற்றனர். ஆனால், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
