இருமல் மருந்து சாப்பிட்டு 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்தியபிரதேச போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருமல் மருந்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய சிந்த்வாராவை சேர்ந்த ஒரு போலீஸ் குழு, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு விரைந்தது.
இந்த நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்தியபிரதேச போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் இருந்தவரை கைது செய்த போலீசார், சுங்குவார்சத்திரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.