பூமியின் நிலப்பரப்பு எப்போதும் அசைவிலேயே இருக்கிறது. இதை டெக்டானிக் பிளேட்கள் என்று அழைக்கிறோம். இவை மிகவும் மெதுவாக வருடத்திற்கு சில சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கின்றன. சில நேரங்களில் இந்த அசைவுதான் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணமாகும்.
அதே போல், ஆஸ்திரேலியா கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் கூறுவதன் படி, இது வருடத்திற்கு சுமார் 7 செ.மீ. வேகத்தில் நகர்கிறது. இதனால், பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, ஆஸ்திரேலியா இந்தியா இருக்கும் திசையில் நெருங்கி வரும் என்று கருதப்படுகிறது.
ஆனால், இது உடனடியாக நடக்கப் போவது இல்லை. பூமியின் நிலப்பரப்பு நகர்வு மிகவும் மெதுவானது. விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் கழித்து தான் ஆஸ்திரேலியா ஆசியாவுடன் மோதும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் புதிய மலைத் தொடர்கள் உருவாகக் கூடும்.
இதேபோல், முன்னாடி பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து, ஆசியாவுடன் மோதியதால் தான் இமயமலை உருவானது. இதே போன்ற நிலப்பரப்பு மோதல்கள்தான் பூமியின் புவியியல் மாற்றங்களுக்கு காரணமாகிறது.
எனவே, ஆஸ்திரேலியா இந்தியாவுடன் மோதும் என்ற விஷயம் உண்மை தான், ஆனால் அது இப்போதே நடக்கப்போவது இல்லை. இது கோடிக்கணக்கான ஆண்டுகள் கழித்து தான் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.