Sunday, December 28, 2025

அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரை மும்பை விமான நிலையத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் இந்தியா வந்தடைந்தார். இது கியர் ஸ்டார்மரின் முதல் இந்திய பயணமாகும். மும்பை விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை இலங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் நாளை மும்பையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ​​வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Related News

Latest News