Tuesday, October 7, 2025

சட்டுன்னு எழுந்து நிற்கும் போது ஏன் தலைச் சுற்றுகிறது? கவனக் குறைவா இருந்தா விபரீதம் தான்!

மருத்துவத் துறையில் அடிக்கடி கேள்விப்படும் சொல் தான் ‘ஆர்த்தோஸ்டாடிக்’. இதன் பொருள், சட்டென எழுந்து நிற்கும் நிலையில் ஏற்படும் உடல் மாற்றங்களை குறிக்கிறது. பொதுவாக ‘ஆர்த்தோஸ்டாடிக் ஹைப்போடென்ஷன்’ என்ற வார்த்தை இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒருவரை அமர்ந்த நிலையில் இருந்து திடீரென நிற்கச் சொன்னால், சில விநாடிகளில் இரத்த அழுத்தம் தாறுமாறாகக் குறைந்து போகும். இதனால் தலைச் சுற்றல், மயக்கம், மங்கலான பார்வை போன்றவை ஏற்படலாம். இதையே மருத்துவ ரீதியில் ‘ஆர்த்தோஸ்டாடிக் ஹைப்போடென்ஷன்’ என அழைக்கின்றனர்.

இது ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை பார்க்கலாம். நீர்ச்சத்து குறைபாடு அதாவது Dehydration, இரத்தச் சோகை, நீண்ட காலமாக படுத்திருக்கும் நிலை, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், அல்லது நரம்பியல் பிரச்சினைகள் போன்றவையே. வயது முதிர்ந்தவர்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது.

பொதுவாக, நிற்கும்போது இரத்த ஓட்டம் கால்களில் தங்கி விடும். இதை சமநிலைப்படுத்த இதயம் மற்றும் நரம்புகள் வேகமாகச் செயல்பட வேண்டும். ஆனால் சிலரிடம் இந்த ஒத்துழைப்பு சரியாக நடக்காததால், இரத்த அழுத்தம் திடீரென குறைந்து விடுகிறது.

இந்த நிலையை தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கும் வழிகளை பார்க்கலாம். மெதுவாக எழுந்து நிற்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, இரத்தத்தில் உப்பு அளவை சீராக வைத்துக்கொள்வது, தேவையான மருந்துகளைச் சரியான முறையில் எடுத்துக்கொள்வது போன்றவையே. சிலருக்கு கம்பிரஷன் சாக்ஸ் அணிவதும் உதவுகிறது.

மொத்தத்தில், ‘Orthostatic’ என்பது சாதாரண தடுமாற்றமல்ல. உடலின் ரத்த அழுத்த கட்டுப்பாடு தொடர்பான முக்கிய அறிகுறி. அடிக்கடி நிகழ்ந்தால் இதை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரை அணுகுவது அவசியம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News