Tuesday, October 7, 2025

மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை

‘கோல்ட்ரிஃப்’ எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயதுடைய 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து உடனடியாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் இரண்டு இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘ரீ லைஃப்'(ReLife) மற்றும் ‘ரெஸ்பிஃபிரெஷ்'(Respifresh) ஆகிய இரு மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் டைஎத்திலீன் கிளைகால் இருப்பது தர பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த இரு மருந்துகளுக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News