கேரளாவில் தெருநாய் கடி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை அங்கிருந்த நாய் ஒன்று கடித்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மயில் கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் தெருநாய் கடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். தெருநாய் கடியில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது, தெருநாய் கடித்தால் என்ன செய்தவது என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது தெருநாய் கடி தொடர்பாக ராதாகிருஷ்ணன் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தெருநாய் ராதாகிருஷ்ணனை திடீரென கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் நாயை விரட்டி அடித்து நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்.
இதனால், இதுவும் விழிப்புணர்வு நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்த கிராமத்தினர் நினைத்தனர். பின்னர், நாடகம் முடிந்தபின்னர் உண்மையிலேயே தெருநாய் தன்னை கடித்து விட்டதாக கிராம மக்களிடம் கூறினார். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ராதாகிருஷ்ணன் அங்கு தெருநாய் கடிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.