Monday, October 6, 2025

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம்! இதெற்கெல்லாம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்! நிதி பாதுகாப்பு உறுதி!

தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு 1923-ஆம் ஆண்டு Employee Compensation Act அதாவது Workmen’s Compensation Act என்ற சட்டத்தை இயற்றியது. இதில், தொழிலாளர்கள் பணியின் போது காயம் அடைந்தால் அல்லது உயிரிழந்தால் அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்திற்கோ நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 3 மிக முக்கியமானதாகும். இதில், தொழிலாளர்கள் “பணியில் இருந்தபோது” அல்லது “பணியுடன் தொடர்புடைய காரணங்களால்” ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான இழப்பீடுகளை பற்றி எடுத்து விளக்குகிறது. அதன்படி,

ஒரு ஊழியர் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தால், அதற்கான இழப்பீடு வழங்க வேண்டியது முதலாளியின் கடமை. விபத்து காரணமாக நிரந்தர ஊனமுற்றாலும், உயிரிழந்தாலும் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.

ஆனால், ஊழியர் தன்னுடைய கவனக்குறைவு, போதைப் பொருள் பயன்படுத்தல், விதிமுறைகளை மீறல் போன்ற காரணங்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்க தேவையில்லை. பணிக்குச் சம்பந்தம் இல்லாத நேரங்களில் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்பட்ட விபத்துகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தாது.

இந்த பிரிவு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முதலாளிகள் தங்களின் பொறுப்புகளை உணரச் செய்கிறது. தொழிலாளர்கள் நியாயமான இழப்பீடு பெறுவதற்கான சட்ட அடிப்படையை இது வழங்குகிறது.

மொத்தத்தில், Employee Compensation Act 1923 இன் பிரிவு 3, தொழிலாளர்கள் பணியில் சந்திக்கும் அபாயங்களை அரசால் அங்கீகரித்து, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News