Tuesday, January 13, 2026

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ஷூ வீசி தாக்குதல் நடத்த முயற்சித்த வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தில் விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதியின் கருத்துக்களால் அந்த வழக்கறிஞர் அதிருப்தி அடைந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராகேஷ் கிஷோர் என்ற அந்த வழக்கறிஞர் சனாதனத்தை அவமதிப்பதை ஏற்கமுடியாது என முழக்கமிட்ட படி காலணி வீசியுள்ளார். இருப்பினும், தலைமை நீதிபதி எந்தத் தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

Related News

Latest News