Tuesday, February 17, 2026

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ‘அவதூறு’ கருத்து: ஐகோர்ட் அதிரடி

தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, காவல்துறையில் புகார் அளித்தார்,மேலும் சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் .

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கை கேட்ட நீதிபதி இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறினார்,

மேலும், மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Related News

Latest News