ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என 6 நோயாளிகள் பலியாகினர். தீ விபத்தில் பல்வேறு ஆவணங்கள், ஐ.சி.யூ உபகரணங்கள், இரத்த மாதிரி குழாய்கள் மற்றும் அந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிற பொருள்களுள் தீயில் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
