TODAY GOLD RATE : ப்பா..!! இப்பவே கண்ண கட்டுதே..!! ஜெட் வேகத்தில் தங்கம் விலை…

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கடந்த வாரம் ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600 விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று{06.10.2025} தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ. 1,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1,66,000 விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News