பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியை அந்த பதவியில் இருந்து நீக்கி அறிவித்தார்.
இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இதயப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.