Sunday, October 5, 2025

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் : பரபரப்பு காட்சி

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றவர் நூலிழையில் உயிர்தப்பிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது வழித்தடம் மாறி ரயிலில் ஏறிய இர்ஃபான் என்பவர் திடீரென இறங்க முயன்றார். அப்போது, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து ஓடிவந்த ரயில்வே போலீசார் அந்த நபரை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News