மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,950 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News