தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் கரூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்த 53 பேர் இன்று (செப். 30) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.