Tuesday, September 30, 2025

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா.இவர் தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நட்டி, சுவாஷிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம்’கருப்பு’ அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ‘ழகரம்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக , நடிகர் சூர்யா 2D Entertainment என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News