சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவத்தில், அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் பயன் தராது என்றும், அது பிரச்சனையை நகர்த்தும் செயல் எனவும் கூறினார்.
விஜய்யை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேவைப்பட்டால் சந்திப்போம் என்றும் சீமான் பதிலளித்தார். இனி வரும் காலங்களில், ஒரு இடத்தை வாங்கி சின்ன பொதுக் கூட்டம் போல் விஜய் நடத்தலாம் என்றும், குறுகலான தெருக்களில் கூட்டம் வைக்காமல், நாற்காலி வைத்து தொண்டர்களை அமர வைத்தால், அவர்கள் அதிக நேரம் நிற்க வேண்டியிருக்காது எனவும் விஜய்க்கு சீமான் அறிவுரை கூறினார்.
தேவைப்பட்டால் விஜய்யை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.