கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரி தவெக தரப்பு மனு அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் , தமிழகத்தை உலுக்கி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெருந்துயர சம்பவம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரி தவெக தரப்பு மனு அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பான மனுவை அளித்துள்ளார்.