கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கி உள்ளது. சுமார் 39 பேர் மட்டும் சம்பவ இடத்தில் இருந்தே சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா என்ற 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், கரூர் அரசு மருத்துவமனையில் பெரும் சோகம் நிலை கொண்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 12 ஆண்கள் மற்றும் பெண்கள் 18 பேர் என இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.