Monday, December 29, 2025

தமிழகத்தை உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் : அருணா ஜெகதீசன் இரண்டாவது நாளாக விசாரணை

கரூர் வேலுச்சாமிபுரத்தில், ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழகத்தை உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று கரூர் விரைந்த அருணா ஜெகதீசன், கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, சம்பவ இடத்திலும் விசாரணை நடத்தி இருந்தார்.

இந்த சூழலில், இன்று காலை முதலே இரண்டாவது நாளாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன், சம்பவம் நடந்த இடத்தில் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினார்.

Related News

Latest News