சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து – அமுதா தம்பதியினர். மாரிமுத்து டைலர் வேலை பார்த்து வருகிறார். அமுதா கம்யூனிஸ்ட் கட்சி நகர்குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் சூழலில் அவரது மகன் கஞ்சா ராகுல் என்பவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்து வருகிறது.
குறிப்பாக பல்வேறு கடைகளில் சென்று மிரட்டி பணம் கேட்பது, செல்போன் திருட்டு, இருசக்கர வாகன திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்கின் கீழ் அவ்வப்போது சிறைக்கு சென்று வந்த நிலையில் அவர் தொடர் குற்றச்செயலை தடுக்கும் வகையில் போலீசார் குண்டாஸ் சட்டம் போட்டு சிறைக்கு அனுப்பினர்.
தற்போது சிறையில் இருந்து வந்த சில தினங்களில் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெருவில் உள்ள பாதாம் பால் விற்பனை செய்யும் கடைக்கு கடந்த 22 ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் கஞ்சா ராகுலுடன் வந்த நண்பர்கள் அந்த கடையில் பாதாம் பால் கேட்டு குடித்துள்ளனர்.
அதற்கு வட மாநில ஊழியர்கள் பணம் கேட்டபோது நாங்கள் எதற்கு தர வேண்டும் நாங்கள் சிதம்பரத்தில் பெரிய ரவுடி எங்களைப் பார்த்து பணம் கேட்கிறாயா என வாக்குவாதம் செய்து சுட சுட இருந்த பாதாம் பாலை ஊழியர் முகத்தில் ஊற்றி அங்கிருந்த கிளாஸ்களை எடுத்து உடைத்தும் சண்டையிட்டு உள்ளனர்.
கஞ்சா போதையில் தள்ளாடி வந்த கஞ்சா ராகுலை அவனது நண்பர்கள் சமாதானம் செய்த நிலையில் போலீசார் வருவதைக் கண்ட கஞ்சா ராகுல் மற்றும் அவரது நண்பர்களுடன் தப்பி சென்றார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வரலாகி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் கஞ்சா ராகுலுக்கு உரிய தண்டனை விதிக்க வேண்டும் மேற்படி அவர் குற்ற செயல்களில் ஈடுபட முடியாதபடி தண்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.