நாமக்கலில் உள்ள கே.எஸ். திரையரங்கம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இருப்பதால், அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தார். திருச்சியில் இருந்து காரில் புறப்பட்ட அவர், நாமக்கலை நோக்கி சாலை மார்க்கமாகப் பயணித்து வருகிறார்.
விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு அருகே வந்த ஓர் அஜித் ரசிகர், தான் வைத்திருந்த விஜய் – அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வாகனத்தில் இருந்த விஜய்யிடம் அளித்தார். அன்புடன் அதைப் பெற்றுக்கொண்ட விஜய், அந்த புகைப்பட பிரேமில் தனது ஆட்டோகிராஃபைப் போட்டு, மீண்டும் அந்த ரசிகரிடமே திருப்பிக் கொடுத்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.