தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ நந்தமுரி பாலகிருஷ்ணா, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என்று அழைத்ததால் ஆந்திர சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தெலுங்கு திரைப்படத்துறையினர் அவரை சந்திக்க முயன்றதாகவும் ஆனால் இதையெல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி புறக்கணித்ததாகவும் பாஜக எம்.எல்.ஏ காமினேனி கூறியுள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்னரே ஜெகன் மோகன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்துறை பிரதிநிதிகளுடன் பேச ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
அப்போது குறிக்கிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ நந்தமுரி பாலகிருஷ்ணா ஜெகன் ஒரு சைக்கோ என்று கூறினார். பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சு ஓ.எஸ்.ஆர்.சி.பி கட்சியினர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணானின் இந்த பேச்சு வெட்கக்கேடானது என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.