உலகின் பல தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். இதை பெறுவதற்காக அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின், இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதால் தன்னை நோபல் பரிசு பெறும் தகுதியுடையவராக கருதுகிறார் என்றும் அவர் வெளிப்படையாக கூறி வருகிறார்.
ஆனால் தற்போது டிரம்புக்கு இந்தப் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிக்க அவர் பலமுறை இரு நாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த போர் இன்னும் நிறைவுக்கு வராததால் இதனால் அவருக்கு பரிசு கிடைக்காது என கூறுகின்றனர்.