Wednesday, February 18, 2026

ஒரே வருடத்தில் ரூ.600 கோடி வசூல் : மிகப்பெரிய சாதனை செய்த நடிகர் மோகன்லால்

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிருதயபூர்வம் ரூ. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன்பு எல்2 எம்புரான் படம் ரூ. 268 கோடியும், தொடரும் ரூ. 235 கோடியும் வசூலித்தது.

இந்த ஆண்டில் மட்டும் அவரது மூன்று படங்கள் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. இதன் மூலம் ஒரே வருடத்தில் திரையுலகில். ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய மலையாள நடிகர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.

சமீபத்தில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திருக்கிறது.

Related News

Latest News