டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய விதிமுறை, அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.
டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய இரு விதமான அத்தாட்சிகளை சமா்ப்பிக்கும் நடைமுறை வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய, கூடுதல் அத்தாட்சிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி அறிவித்தது. அதிக சிக்கல் கொண்ட பணப் பரிவா்த்தனைகள் குறித்து தெரியப்படுத்தவும், உறுதி செய்யவும் டிஜிலாக்கா் தளத்தைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய விதிமுறை, அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.