Saturday, September 27, 2025

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி; ரூ.20 இல் சூப்பர் உணவு கடை !! எங்க தெரியுமா?

ரயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே துறை அவ்வ்வப்போதும் ஏதேனும் அம்சங்களை கொண்டு வருவதுண்டு, அந்த வகையில் தற்போது தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பது; தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், IRCTC -யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.20-க்கு ‘சிக்கன உணவு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த ‘சிக்கன உணவு’ திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும்.இந்த திட்டத்தை குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் வரைக்கும் தெரிவதில்லை.

ஆகையால், சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் “சிக்கன உணவு” விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன. இந்த கடையில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News