GST மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான Swiggy, Zomato-வில் மழை பெய்யும் பொழுது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் GST விதிக்கப்பட்டுள்ளது. இது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.அதில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு GST என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அவர் பதிவில், “மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
