Wednesday, February 18, 2026

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!!

2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் யாருக்கெல்லாம் விருது என்பதை பார்க்கலாம் தற்போது!!

2021 – திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.

2021 – திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது.

2021 – திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.

2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.

2022 – நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.

2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.

2022 – கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.

2023 – திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 – குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.

2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்

2023 – நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

மேலும், பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.

பாரதியார் விருது – முருகேச பாண்டியன்

எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது – யேசுதாஸ்

பால சரஸ்வதி விருது – முத்து கண்ணம்மாள்

எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகர் ஆகியரோக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

Related News

Latest News