நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் “மது அருந்துவிட்டு, புகைபிடித்துவிட்டு, அசைவம் சாப்பிட்டுவிட்டு புனிதமான காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தைக் காண வரக்கூடாது என போலி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து ரிஷப் ஷெட்டியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “உணவு என்பது அவரவர் உரிமை, விருப்பம் சார்ந்தது. அந்த போலி போஸ்டர் வெளியானபோது முதலில் எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், ஒரு போலியான விஷயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்பதால் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இதற்கும், இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
