நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் சுதாமூர்த்தி. இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் (டிராய்) ஊழியர் என்றும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காமல் உள்ளது. எனவே உங்கள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை தரும்படி கேட்டுள்ளார். மேலும் உங்கள் செல்போனில் இருந்து ஆபாச படங்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் மர்மநபர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்மநபரை தேடி வருகின்றனர்.
