மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 97 மருந்துகள் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம்
