ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் ஒளிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் விமான நிறுவனமான KAM ஏர் விமானத்தில் சிறுவன் இந்த செயலை செய்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுவனிடம் விசாரித்தபோது காபுல் விமான நிலயத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்து விமானத்தின் கியர் பெட்டியில் ஏறி ஒளிந்துகொண்டதாக சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளான்.
விசாரணைக்கு பிறகு அதே விமானத்தில் சிறுவன் ஆப்கானிஸ்தானுக்கே பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டான்.
