சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை (24.09.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செம்பியம்:
உமா நகர், முத்தமிழ் நகர் 1 முதல் 8வது பிளாக், SPOA டீச்சர்ஸ் காலனி, செக்ரட்ரியேட் தெரு, அக்பர் நகர், மாதவன் நகர், பிஆர்எச் சாலை, பரிமேகம் நகர், சுதா நகர், விக்னேஷ் நகர், விநாயகர் நகர், பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் தெரு, காமராஜ் தெரு, ரெட்ஹில்ஸ் சாலை, மாதா தெரு, பஜனை கோவில் தெரு, பள்ளி சாலை, கிரிஜா நகர், எம்என் நகர், சன்னதி தெரு, சிட்டிபாபு நகர், கக்கன்ஜி காலனி, ராஜா தெரு, கபிலர் தெரு, எம்பிஎம் தெரு, சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, நாகை அம்மையார் தெரு, ராஜாஜி தெரு ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படயுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்:
சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமாத்தம்மன் நகர், இடர்.ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதி அம்மன்கோவில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர் ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படயுள்ளது என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
