இன்றைய காலத்தில், internet இல்லாமல் வாழ்க்கையே சாத்தியமில்லை எனலாம். ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்து வேலை செய்வது, திரைப்படங்கள் பார்ப்பது, கேமிங் போன்ற அனைத்திற்கும் வேகமான வைஃபை அவசியம். ஆனால் பல வீடுகளில் WiFi வேகம் குறைவாக இருப்பது ஒரு பெரிய சிரமமாக உள்ளது. சிக்னல் பலவீனமாக காரணமே தெரியாமல் பயனர்கள் அவதிப்படுகின்றனர். உண்மையில், சில எளிய மாற்றங்களால் இதை சரிசெய்ய முடியும்.
முதலில், ரூட்டரின் இடம் மிக முக்கியம். அதை ஒரு மூலையில் அல்லது தரையில் வைப்பது தவறு. வீட்டு மையப்பகுதி, உயரமான இடம் மற்றும் சுவர்களிலிருந்து தூரம் என்பவை சிறந்த இடமாகும். மைக்ரோவேவ், கம்பியில்லா போன், உலோகப் பொருட்களுக்கருகில் வைக்க வேண்டாம்.
அடுத்து, சிக்னல் குறுக்கீட்டைத் தவிர்க்க வேண்டும். புளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற சாதனங்கள் WiFi வேகத்தை பாதிக்கும். அதேபோல, அருகில் இயங்கும் பிற WiFi நெட்வொர்க்குகளைத் தவிர்க்க, ரூட்டரை நெரிசல் குறைந்த சேனலுக்கு மாற்றலாம்.
புதிய ரூட்டரை பயன்படுத்துவதும் அவசியம். பழைய ரூட்டரை விட்டு, Wi-Fi 6/6E ஆதரவு கொண்ட டூயல் அல்லது டிரை-பேண்ட் ரூட்டர் சிறந்த தேர்வு. 5GHz வேகத்தையும், 2.4GHz நீளமான கவரேஜையும் தரும்.
அதேபோல், ரூட்டர் அப்டேட்கள் பக்குவமாக செய்யப்பட வேண்டும். இது பாதுகாப்பையும் செயல்திறனையும் உயர்த்தும்.பெரிய வீடுகளுக்கு, வைஃபை எக்ஸ்டெண்டர் அல்லது மெஷ் சிஸ்டம் சிறந்த தீர்வாகும். இதனால் அனைத்து அறைகளிலும் சிக்னல் கிடைக்கும்.
மேலும், வலுவான பாஸ்வேர்டு மற்றும் WPA2/WPA3 குறியாக்கம் மூலம் நெட்வொர்க்கைப் பாதுகாப்பது அவசியம்.கடைசியாக, டிவி, கேமிங் கன்சோல் போன்ற ஹெவி சாதனங்களை ஈதர்நெட் கேபிள் மூலம் நேரடியாக இணைப்பது வைஃபைக்கு சுமையைக் குறைத்து வேகத்தை மேம்படுத்தும்.
