சென்னை வேளச்சேரியில், 2அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வேளச்சேரி தண்டீஸ்வரம் அருகே, தி.நகரிலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் கொளத்தூர் நோக்கி சென்ற பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.எதிரெதிர் திசையில் வந்து பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட பயணிகள் 8 பேர் காயமடைந்த நிலையில், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
வேளச்சேரி பிரதான சாலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
