Monday, December 29, 2025

ஒருவருக்கு சனிக்கிழமை மட்டும்தான் வேலை- நாகையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 13-ந் தேதி பிரசாரத்தை தொடங்கிய நிலையில், இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருவாரூருக்கு விஜய் புறப்பட்ட சற்று நேரத்தில், நாகப்பட்டினத்தில் அவசர அவசரமாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது.

அதில், “மீனவர் 7 நாள் வேலை பார்க்கிறார். ஆனால், இங்கே ஒருத்தர் மட்டும் 1 நாள்தான் வேலை பண்றாரு. அதுவும் சனிக்கிழமை மட்டும். சிறப்பு” என்று கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News